திருவையாறு
அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் வெகுமும்மரமாக நடைபெறுகின்றன, செய்து முடிக்கப்பட்ட பிரதான திருப்பணிகள். திருக்கோயிலின் பழமையும் நேர்த்தியும் மாறாமல் புதுப்பிக்கும் வண்ணம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

தேவார பதிகம் பாடல் பெற்றத் 276 தலத்தில் ஒன்றானதும், சோழ நாட்டுத் காவிரி வடகரைத் தலத்தில் 51 வது தலமாக விளங்குவதும் ,நால்வர் பெருமக்கள் போற்றிய தலம் என்ற சிறப்புடையதும் ,அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட தலம் என்ற சிறப்புடையதும் மற்றும் பல எண்ண இயலாத சிறப்புக்களை தன்னுள் உள்ளடக்கிய திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு. ஸ்ரீ தர்மாசம்வர்த்தினி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கும்பாபிஷேக பெருவிழா தை மாதம் 24 மற்றும் 25 (06.02.2013 மற்றும் 07.02.2013) வியாழக்கிழமை. அடியார் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு ஐயாறப்பர் திருவருளை பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.
தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும்
இறைவா போற்றி!!
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!








No comments:
Post a Comment