Wednesday, 30 January 2013

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுக்கான குண்டம் அமைக்கும் பணி

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகளுக்கான குண்டம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணைமிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு. காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்.

சோழவளநாட்டின் காவிரி தென்கரையின் 51ஆவது திருத்தலமாக விளங்குவதும் நால்வராலும் பாடல்பெற்றதும் அப்பருக்கு கயிலைக்காட்சி நல்கியதும் சுந்தரர் சேரமான் பெருமானுக்கு காவிரி வழிவிட்டு காட்சி நல்கியதும் கரிகாலன் ராஜராஜன் இராசேந்திரசோழன் உள்ளிட்டோர் கட்டியதும் சப்தஒலி கேட்கக் கூடியதும் முருகன் வில்லேந்திய வேலனாக இருப்பதும் சுசரிதனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததும் 32ஆவது தருமம் செய்து அம்மை தர்மசம்வர்த்தினியான திருவையாற்றுத் திருத்தலம் 1971க்குப் பிறகு 27.07.2009 திருப்பணி துவங்கப்பெற்று வரும் தை மாதம் 24 & 25 (06.02.2013 & 07.02.2013) வியாழக்கிழமை குடமுழுக்கு நடத்த தருமையாதீனம் 26ஆவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுளம்பற்றியுள்ளார்கள். குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக 8 கால யாக சாலை பூசைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் அன்பர்கள் சிவனடியார்கள் தங்கவும் உணவுக்கும் மிக விரைவாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்பர்கள் கலந்துகொண்டு தரிசித்து திருவருளையும் குருவருளையும் பெற்றுத் திகழ்ந்திட விரும்புகின்றோம்.

குந்தி நடந்து குனிந்து ஒரு கை கோல் ஊன்றி
நொந்து இருமி ஏங்கி நுறைத்தேறி - வந்துந்தி
ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே
ஐயாறு வாயால் அழை.

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் வெகுமும்மரமாக நடைபெறுகின்றன, செய்து முடிக்கப்பட்ட பிரதான திருப்பணிகள்.

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் ஆலயத்தில் திருப்பணி வேலைகள் வெகுமும்மரமாக நடைபெறுகின்றன, செய்து முடிக்கப்பட்ட பிரதான திருப்பணிகள். திருக்கோயிலின் பழமையும் நேர்த்தியும் மாறாமல் புதுப்பிக்கும் வண்ணம் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

 தேவார பதிகம் பாடல் பெற்றத் 276 தலத்தில் ஒன்றானதும்சோழ நாட்டுத் காவிரி வடகரைத் தலத்தில் 51 வது தலமாக விளங்குவதும் ,நால்வர் பெருமக்கள் போற்றிய தலம் என்ற சிறப்புடையதும் ,அப்பர் பெருமான் கயிலைக் காட்சி கண்ட தலம் என்ற சிறப்புடையதும் மற்றும் பல எண்ண இயலாத சிறப்புக்களை தன்னுள் உள்ளடக்கிய திருக்கயிலாய பரம்பரைத் தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு. ஸ்ரீ தர்மாசம்வர்த்தினி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி கும்பாபிஷேக பெருவிழா தை மாதம் 24 மற்றும் 25 (06.02.2013 மற்றும் 07.02.2013) வியாழக்கிழமைஅடியார் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டு ஐயாறப்பர் திருவருளை பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
ரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!

ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

Live Webcast of Kumbhabhishekam to Lord Aiyarappar-Dharmasamvardhini temple from Thiruvaiyaru (பக்தர்கள் வசதிக்காக ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு)
 
Watch Live webcast of Kumbhabhishekam to Lord Aiyarappar-Dharmasamvardhini temple from Thiruvaiyaru on 3rd February 2013 to 7th February 2013 will be available on the Aiyarappar temple websites (www.aiyarappar.com, www.dharmapurammutt.com, www.sivabhogam.com ) Devotees can have the holy darshan of Yagasalai Pooja and Maha Kumbhabhishekam.

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் கோவில் கும்பாபிஷேகம், இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன, 3.2.2013 முதல் தினமும் காலை, மாலையில் நடக்கும் யாகசாலை பூஜைகள் அதன் தொடர்ச்சியாக கும்பாபிஷேக நிகழ்ச்சிகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமென கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது (www.aiyarappar.com, www.dharmapurammutt.com, www.sivabhogam.com )

நம: பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி! போற்றி!

காவாய் கனகத் திரளே போற்றி!
கயிலை மலையானே போற்றி! போற்றி!

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் திருகோவில் குடமுழுக்கு விழா அழைப்பிதழ்

திருவையாறு அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் திருகோவில்  குடமுழுக்கு விழா அழைப்பிதழ்

ஆரூரில் பிறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணைமிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த ஊர் திருவையாறு.  காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பேராற்றல் மிக்க தென்கயிலாயமாகிய அருள்மிகு அறம் வளர்த்தநாயகி உடனாய ஐயாறப்பர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள புனிதமிக்க திருவையாறு திருத்தலம்.

சோழவளநாட்டின் காவிரி தென்கரையின் 51ஆவது திருத்தலமாக விளங்குவதும் நால்வராலும் பாடல்பெற்றதும் அப்பருக்கு கயிலைக்காட்சி நல்கியதும் சுந்தரர் சேரமான் பெருமானுக்கு காவிரி வழிவிட்டு காட்சி நல்கியதும் கரிகாலன் ராஜராஜன் இராசேந்திரசோழன் உள்ளிட்டோர் கட்டியதும் சப்தஒலி கேட்கக் கூடியதும் முருகன் வில்லேந்திய வேலனாக இருப்பதும் சுசரிதனுக்காக எமனை சம்ஹாரம் செய்ததும் 32ஆவது தருமம் செய்து அம்மை தர்மசம்வர்த்தினியான திருவையாற்றுத் திருத்தலம் 1971க்குப் பிறகு 27.07.2009 திருப்பணி துவங்கப்பெற்று வரும் தை மாதம் 24 & 25 (06.02.2013 & 07.02.2013) வியாழக்கிழமை குடமுழுக்கு நடத்த தருமையாதீனம் 26ஆவது குருமஹாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திருவுளம்பற்றியுள்ளார்கள். குடமுழுக்கு விழாவிற்கு முன்னதாக 8 கால யாக சாலை பூசைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் அன்பர்கள் சிவனடியார்கள் தங்கவும் உணவுக்கும் மிக விரைவாக ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அன்பர்கள் கலந்துகொண்டு தரிசித்து  திருவருளையும் குருவருளையும் பெற்றுத் திகழ்ந்திட விரும்புகின்றோம்.

தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!!ரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!
                                     திருச்சிற்றம்பலம்